
திருச்சி: துறையூர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக வார்டு உறுப்பினர் ஒருவர் நகர்மன்ற கூட்டத்தில் கடந்த வாரம் புகார் எழுப்பினார்.மேலும், இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் தீவிர கஞ்சா தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். துறையூர் பேருந்து நிலையம், பாலக்கரை மற்றும் முக்கிய இடங்களில் பரிசோதனை நடைபெற்றது.இந்நிலையில், தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன் அடிப்படையில், பாலக்கரை அருகே தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பச்சை பெருமாள்பட்டி வெள்ளாளர் தெருவை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் அருண்குமாரி காரில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறை அதிகாரிகள் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இவர் பச்சை பெருமாள்பட்டி திமுக கிளை செயலாளராகவும், தற்போது இளைஞர் அணியில் பொறுப்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், அருண்குமாருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது அதனை சப்ளை செய்தது யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.துறையூரில் கஞ்சா தடுப்பு சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் யாரும் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், ஒரே நாளில் 2 கிலோ கஞ்சாவையும், அதனை கடத்தி வந்த ஆளுங்கட்சி நிர்வாகியையும் போலீசார் கைது செய்துள்ளது அப்பகுதி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அருகில் திருச்சி மாநகரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீவிர வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
I needed to thank you for this good read!! I definitely loved every bit of it. I have you book marked to check out new things you postÖ
Slow pay out poker stars, crypto gambling revenue per country – hitting the slot machine.