
காந்திநகர்: பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில், ஜாம்நகர் பகுதியில் இருந்தது, அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்று, இன்று 20/04/23ம் தேதி, குலாப்நகர் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, வேகத்தடை ஒன்றில், பேருந்து ஏறி, இறங்கியபோது பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து, பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த, இரு பயணியர் பேருந்திலிருந்து, நடுரோட்டில் கீழே விழுந்தனர்.
அப்போது, வாகனங்கள் எதுவும் வராததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில், கீழே விழுந்த குனாட் கிராமத்தைச் சேர்ந்த, பிகல் துஷ்யந்த் பிரதாப் சிங், 20 மற்றும் கேரி கிராமத்தைச் சேர்ந்த ஜடேஜா ஹர்தீப்சிங் பபுபா, 18 ஆகிய இரு கல்லுாரி மாணவர்கள் காயமடைந்தனர். இருவரும், ஜிஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததும், பயணியர் நின்று செல்லக்கூட, இடம் இல்லாததே, கண்ணாடி உடைந்து விழுந்தபோது, கல்லுாரி மாணவர்கள் இருவர், விபத்தில் சிக்க காரணம் எனவும், பயணியர் தெரிவித்துள்ளனர். அதேநேரம், இச்சம்பவம் தொடர்பாக, பேருந்து ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, ஜாம்நகர் பணிமனை மேலாளர், இஸ்ரானி தகவல் தெரிவித்துள்ளார்.