
புதுடெல்லி: இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voters’ Day) கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும்.
18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும் உத்திரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி அவர்கள் தேசிய வாக்காளர் தினத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் நாட்டின் அரசமைப்பில் ஒரு நபர், ஒரு வாக்கு மற்றும் ஒவ்வொரு வாக்குக்கும் ஒரு மதிப்பு போன்ற அற்புதமான சமத்துவக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் சகாப்தத்தை செய்தார். எனவே ஜன-25, “தேசிய வாக்காளர் தினமான” இன்று உங்கள் வாக்கு மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான உறுதியை மேற்கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.