
பாட்னா: பீஹாரில், ககாரியா மாவட்டத்தில், கங்கை நதி குறுக்கே, ரூ.1,750 கோடியில் மாநில அரசு கட்டி வந்த பாலம், மூன்று வாரங்களுக்கு முன், இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தது.ஏற்கனவே, ஏப்.,30ம் தேதி, இப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், இரண்டாவது முறையாகவும், பாலம் இடிந்து விழுந்ததில், ஒருவர் பலியானார்.
அதேபோல், கடந்த, 24ம் தேதி கிஷன்கஞ்ச் – கதிஹார் பகுதிகளை இணைக்கும் விதமாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது.இதில், உயிரிழப்புகள் ஏற்படாத நிலையில், மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம், இன்று (ஜூன்.,28)ம் தேதி, அம்மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள, கங்கை ஆற்றின் மீது, கட்டப்பட்டு வந்த, தற்காலிக பாலம், பலத்த காற்றால், இடிந்து விழுந்தது.ரகோப்பூர் நகர் மற்றும் வைஷாலி மாவட்ட தலைமையகத்தை இணைக்கும் விதமாக, இப்பாலம் கட்டப்பட்டு வந்தது.ஒரே மாதத்தில் அடுத்தடுத்து, மூன்று பாலங்கள் இடிந்து விழுந்துள்ள சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.