ஒட்டகத்தை வைத்து மாட்டு வண்டியில் ஆற்று மணல் திருடிய நபர் காவல்துறையினர் கைது செய்தனர்..!!

சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேரத்தில் போலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒட்டகத்தைக் கட்டிக் கொண்டு மாட்டு வண்டி வந்துள்ளது. இதைப்பார்த்த போலிஸார் மாட்டு வண்டியை நிறுத்தி, அதிலிருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் பல்லாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்துள்ளது.மேலும் இவர் சவூதி அரேபியாவில் நீண்ட காலம் வேலைபார்த்து வந்துள்ளார். பிறகு சில மாதங்களுக்குச் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து மாட்டு வண்டியில் ஆற்று மணலை கடத்தி வந்துள்ளார். பின்னர் மணல் பரப்பில் வண்டியை இழக்க மாடு சிரமப்பட்டுள்ளதால், மாட்டிற்குப் பதில் ஒட்டத்தைப் பயன்படுத்த திட்டம்போட்டுள்ளார்.இதன்படி ராஜஸ்தானிலிருந்து ஒட்டகத்தை வாங்கி ஆற்று மணலைக் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில்தான் சரவணண், போலிஸார் ரோந்தின் போது சிக்கியுள்ளார். இதையடுத்து போலிஸார் ஒட்டகத்தையும், மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *