
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேயுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் உத்திரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். குடும்பத்தாரை இழந்து வாடும் உறவினர்களுக்கு இயற்கை வலிமையை அளிக்கட்டும்.
இந்த கொடூரமான விபத்துக்கு உயர்நிலைக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தகுந்த நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.