என்னைக் காதலிக்கலைனா கொன்னுடுவேன்! – ஒன்பதாம் வகுப்பு மாணவியை மிரட்டிய இளைஞர் கைது.!

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயதாகும் சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகிறார். 24-ம் தேதி, வடுகந்தாங்கல் பகுதியிலிருந்து விரிஞ்சிபுரம் மார்க்கமாகச் செல்லும் சாலையில், தனியார் நிறுவனம் அருகில் மாணவி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த கீழ்விலாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகனான 23 வயதாகும் இளைஞர் திருமலை, சிறுமியை வழிமறித்து காதலிப்பதாகக் கூறி வம்பிழுத்திருக்கிறார்.சிறுமி அச்சப்பட்டு பேச மறுத்தபோது, ‘‘என்னைக் காதலிக்கலைனா கொன்னுடுவேன்’’ என இளைஞர் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பெற்றோர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அவர்களின் புகாரைப் பெற்றுக்கொண்ட எஸ்.ஐ பாஸ்கர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, சிறுமிக்குக் காதல் தொல்லைக் கொடுத்த இளைஞர் திருமலையைக் கைது செய்து விசாரித்து வருகிறார்.சமீபகாலமாக, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது தொடரும் பாலியல் வன்முறைகளால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *