
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்டது விருவீடு. இப்பகுதி எம்ஜிஆர் நகர் பகுதியில் குடியிருப்பவர் வேல்முருகன். பொறியியல் பட்டதாரியான இவர் திருமணம் முடிந்து மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் இதே பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சுய தொழில் செய்வதற்காக நிலக்கோட்டை நாகையா கவுண்டன்பட்டி பகுதியைச்சேர்ந்த பரமேஸ்வரி என்பவரிடம் ரூபாய் 3 லட்சம் பணத்தை வட்டிக்கு வாங்கியதாகவும், முதல் மாதத்தில் பணத்தை கொடுக்க சென்ற பொழுது நான்கு வட்டிக்கு உங்களுக்கு பணம் வழங்கவில்லை. பத்து வட்டி என்று தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு கொரோனா காலகட்டத்தில் தனக்கும், தனது மனைவியும் வைரஸ் தொற்று காரணமாக திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் ஊருக்கு சென்று இரண்டு மாடுகளை விற்று 54 ஆயிரம் பணம் கட்டியதாகவும் அதன் பிறகு தனது குழந்தைகளுக்கு காதணி விழா வைத்து இரண்டு லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் தற்போது வரை 11 லட்சம் ரூபாய் வரை வட்டி மட்டும் மிரட்டி வாங்கி உள்ளனர்.
தொடர்ந்து வீட்டிற்கு வந்து மிரட்டி பத்திரங்களில் ஏழு லட்சம், இரண்டு லட்சம், ஒரு லட்சம் என தொகையை பூர்த்தி செய்து கையெழுத்து வாங்கியதாகவும் தொடர்ந்து ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசி வருவதால் கடந்த இரண்டு வருடங்களில் மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்தோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் மையத்தில் வைத்து தனது மனைவியையும், தன்னையும் ஆபாசமாகவும், அருவருக்கத் தக்க வகையிலும் பேசி உனது காலை உடைத்து விட்டு உனது மனைவியை நாங்கள் அழைத்துச் செல்கிறோம் என்று கூறி உள்ளனர்.
அதே போல் எந்த காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்தாலும் என் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். தொடர்ந்து மிரட்டி வருவதால் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்குவதற்காக வந்துள்ளோம். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் எனது மனைவி, எனது தாய், நான்கு குழந்தைகள் என மொத்தம் ஏழு பேரையும் அரசு கருணை கொலை செய்து விட வேண்டும் என்றும் கண்ணீருடன் கூறினர்.