
கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி ரெயில் என்ஜின்களும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் மூலம் இயங்கும் என்ஜின்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய அந்தஸ்துடனும் ஆசியாவின் மிக நீண்ட பல்சக்கர தண்டவாள அமைப்புடனும் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது நீலகிரி மலை ரயில். டீசல் மற்றும் பர்னஸ் ஆயிலை எரிபொருளாக கொண்டு நீராவி மூலம் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே இயக்கப்படுகிறது. நீராவி இன்ஜின்களை கூடுதல் கவனத்துடன் பராமரித்து இயக்கி வருகின்றனர். இந்த நீராவி மலை ரயிலில் பயணிக்க உலக அளவில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 200 சுற்றுலாப் பயணிகளுடன் மலை ரெயில் சென்றது. அப்போது குன்னூர் ஆடர்லி அருகே இன்ஜினில் பழுது ஏற்பட்டதால் ரெயில் நிறுத்தபட்டது. அதனை தொடர்ந்து ரெயில்வே பணிமனை பணியாளர்கள் வந்து பழுது நீக்கினர். சுமார் 4 மணி நேரம் கழித்து ரெயிலில் பழுது நீக்கப்பட்டது. இதனால் குன்னுருக்கு காலை 10.15 வர வேண்டிய மலை ரயில் பிற்பகல் 2.15 குன்னூர் வந்தடைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.