
உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஒரு நாள் அடையாள கவன ஈர்ப்பு உள்ளிருப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் 1 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது தமிழக அரசால் அளிக்கப்பட்ட வாய்ப்பு மறுக்கப்பட்ட தகுதி படைத்தவருக்கு பதவி உயர்வினை வழங்க கோரி பலமுறை கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்திடம் முறையீட்டும் பணி உயர்வு வழங்காமலும் பல்வேறு வகையில் ஊழியர்களின் நலன் சார்ந்த பணிகளில் மெத்தனமாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தினை ஈர்த்திடும் விதமாக பின்வரும் முதற்கட்ட இயக்க நடவடிக்கை மேற்கொள்ள முடிவு எடுக்க வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.