
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை மாவட்ட துணை கண்காணிப்பாளர் பணியாற்றிவந்த காவலர் திரு.மணிமொழியன் அவர்கள் பணிமாற்றம் அடைந்ததால் தனது தனது சொந்த செலவில் பல ஆயிரம் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார் இதில் ஒரு பகுதியாக கெடிலம் பேருந்து நிலையம் அருகில் பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கிய காட்சி மேலும் அவர் குறிப்பிட்டுள்ள வாட்ஸ்அப் செய்தியில் தான் பணி மாற்றம் அடைந்து வேறு இடத்திற்குச் சென்றாலும் எனது உதவி தேவைப்பட்டால் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் ஏழு மாத காலம் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்கள் காவலர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகத்துறை ஆகியோர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.!