
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் ஏப்10 , புரட்சி பாரதம் கட்சி சார்பாக ஏப்ரல் – 14 -ல் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் பிறந்த நாள் விழா மற்றும் 10-ல் டாக்டர் பூவை எம்.மூர்த்தியார் அவர்கள் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு டாக்டர் பூவை எம்.ஜெகன்மூர்த்தியார் எம்எல்ஏ அவர்களின் ஆணைக்கிணங்க. உளுந்தூர்பேட்டை தொகுதி செயலாளர் K.K.ஏழுமலை தலைமையில் திருநாவலூர் ஒன்றிய அமைப்பாளர் சபரிநாதன் உளுந்தூர்பேட்டை நகர அமைப்பாளர் R.பாண்டியன் முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பூவை ஆறு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஏழை எளியோருக்கு அன்னதானம் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நோட்டு பேனா வழங்கினார்.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் வேல்முருகன், விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் வீரப்பன், திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் தொழிற்சங்கம் கிராமம் அன்பு, ஏமப்பூர் அசோக், வீர துரை குன்னத்தூர் கிளை செயலாளர் கண்ணன் திருவெண்ணைநல்லூர் ஒன்றிய இளைஞரணி துணை தலைவர் செவலை தர்மா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.