
கடந்த மார்ச் 8-ந்தேதி டெல்லியில் இருந்து இவர்கள் பேரணியை தொடங்கினர். இவர்கள் 29/03/22அன்று உளுந்தூர்பேட்டைக்கு வந்த நிலையில் ராணுவ அதிகாரிகள் 60 பேருக்கு உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் தேசிய கொடியை ஏந்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணளவிகள் 100 பேர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சியுடன் தேசியக் கொடியை ஏந்தி வரவேற்பளித்தனர். பின்னர் அனைவருக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் இளநீர், நுங்கு, மோர் உள்ளிட்டவை வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.