உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு நேபாளம், பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா.!

புதுடெல்லி,உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டினிக் குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 107ஆவது இடத்திற்கு தள்ள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 101-வது இடத்தில் இருந்தது. ஒரே ஆண்டில் இந்தியா 6 இடங்கள் பின் தங்கியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.அண்டை நாடுகளான வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளத்தை விட இந்தியா இந்தப்பட்டியலில் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. இந்த நாடுகளின் பட்டினிக் குறியீடு 5-க்கும் குறைவாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக பட்டினிக் குறியீடு குறித்து வெளியான அறிக்கையை சுட்டிக்காட்டி மத்தியில் ஆளும் பாஜக அரசை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார். ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் இது பற்றி கூறுகையில், கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் இந்தியா தொடர்ந்து பின் தங்கியே வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, வளர்ச்சி குன்றிய நிலை உள்ளிட்ட உண்மையான பிரச்சினைகளுக்கு பிரதமர் மோடி தீர்வு காணப்போகிறார்? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.சர்வதேச அளவிலான பட்டினி குறியீட்டு அறிக்கையை தயாரித்த அயர்லாந்தை சேர்ந்த உதவி அமைப்பு மற்றும் ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர் ஹில்பே ஆகிய இரு அமைப்புகளும் இந்தியாவில் காணப்படும் பட்டினி அளவு மிக தீவிரமானது என்று வரையறுத்துள்ளது.ஊட்டச்சத்து குறைபாடு, 5வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயர்த்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை அடிப்படையாக வைத்து உலக பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *