
லக்னோ,உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்குள்ள 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது, இதற்கான பிரசாரம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

2.24 கோடி வாக்காளர்கள் உள்ள சுல்தான்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட மாவட்டங்களில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துபவை.இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. 5-வது கட்ட தேர்தலில் துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்ட பிரபலங்கள் களம் காண்கிறார்கள்.