உத்திரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.!

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.ஹாத்ரஸ், ஃபிரோஸாபாத், மைன்புரி, ஜான்சி, லலித்பூா், காஸ்கஞ்ச் உள்ளிட்ட 59 தொகுதிகளில் நடைபெறும் தோ்தலில் 627 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 2.15 கோடிக்கும் அதிகமானவா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.மூன்றாம் கட்ட தோ்தலில் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கா்ஹல் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணையமைச்சா் சத்தியபால் சிங் பகேல் போட்டியிடுகிறாா்.மூன்றாம் கட்ட தோ்தலில் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கா்ஹல் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணையமைச்சா் சத்தியபால் சிங் பகேல் போட்டியிடுகிறாா்.ஃபரூக்காபாத் சதா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக லுயீஸ் குா்ஷித் போட்டியிடுகிறாா். இவா் காங்கிரஸ் மூத்த தலைவா் சல்மான் குா்ஷித்தின் மனைவி. மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் தனித்து போட்டியிடுகின்றனர் இதனால் உத்தர பிரதேச தேர்தல் இந்திய மக்களிடையே எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. உபி 403 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே இரண்டு கட்ட தோ்தல் நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டத்தோ்தல் இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *