
நைனிடால்: உத்தரகண்ட் மாநிலம், நைனிடாலின் லால்குவான் பகுதியில் ரயிலில் அடிபட்டு யானை உயிரிழந்தது.

நைனிடாலின் லால்குவான் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானை ரயிலில் அடிபட்டது. யானையை ரயில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றதால் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மேற்கு கௌலா வனத்துறையினர் தெரிவித்தனர்.இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.