உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு; 570-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு காரணமாக சுமார் 570 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காலநிலை, உள்கட்டமைப்பு மாற்றங்களால் நிலம் சரிந்து வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது; 60 குடும்பங்கள் வெளியேறின. வீடுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பாதுகாப்பு கருதி 29 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உயிர் சேதங்கள் குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *