
உத்தரப்பிரதேசம்: பஹ்ரைச்சின் தப்பே சிபா பகுதியில் இன்று காலை பேருந்தும் லாரியும் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். 30 நவம்பர் 22 அதிகாலை 4.30 மணியளவில் ஜெய்ப்பூரில் இருந்து பஹ்ரைச் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது தவறான திசையில் வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 15 பேரில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.