உதவி இயக்குனருக்கு சென்னையில் நடந்த நவீன தீண்டாமை முகநூலில் பதிவிட்டு வருத்தம்.!

சென்னை: 21 ஆம் நூற்றாண்டிலும் விடாமல் துரத்தும் சாதி தீண்டாமை கடந்த சில நாட்களாக முன்பு சங்கரன்கோயில் அருகே ஒரு கடையில் பட்டியலின சிறுவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்து தீண்டாமையில் ஈடுபட்டது பெரும் விவாதப் பொருளான நிலையில், பல்வேறு சாதனைகளுக்கு எடுத்துக்காட்டாக திகழும் நம்ம சிங்கார சென்னையிலும் காலம் காலமாக குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும் என அறிவிப்பதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பாக பேஸ்புக்கில், உதவி இயக்குநர் ஷாஜன், தனக்கு நேர்ந்த துயரத்தை அனுபவத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில், “சமீபத்துல வீடு தேடி சென்னைல அலஞ்சுட்டு இருந்தேன், அப்போ திருவல்லிக்கேணில இருக்க ஒரு வீட்டுக்கு வெளிய Tolet board பாத்துட்டு உள்ள போனேன்.வரிசையா வீடு இருந்துச்சு. எந்த வீடு வாடகைக்குன்னு தெரியல. அந்த நேரம், ஒரு ஆள் சட்ட போடாம வேஷ்டியோட வந்து யார் வேணும்னு வேகமா வெளிய தொறத்துற மாறி கேள்வி கேட்டாரு. நான் tolet board பார்த்து வந்தேன்னு சொல்ல அடுத்த கேள்வி ” Brahmin ஆ நீங்க” ன்றது தான்.இல்லன்னு சொல்லவும், வெளிய கையோட அழைச்சிட்டு வந்து அந்த tolet boardஅ காட்டி படின்னு (ஒருமைல பேசுறது சாதாரணமாவே வந்துருது) சொன்னாரு. Tolet போர்ட்க்கு கீழ “Brahmins only” னு பேனாவால எழுதி இருந்துச்சு. “படிச்சுட்டீயா ..தெரிஞ்சுதா”ன்னு அப்டி ஒரு சிரிப்பு அந்த மனுஷனுக்கு; எதையோ சாதிச்ச மாறியும், எனக்கு பாடம் எடுத்த மாறியும். கடந்த ரெண்டு வாரமா இது பெரும்பாலான இடங்கள்ல சுத்தி சுத்தி எனக்கு நடந்துட்டு இருந்துச்சு. நாகரீகம் வளர்ச்சி அடைந்த நகரத்தில் தீண்டாமையின் அளவீடுகளும் அவ்வாறே வளர்ந்து வந்துள்ளது என்பதே நிதர்சனம் ஆகிறது. சமீபத்தில் தமிழகத்தில் ஒரு பெட்டி கடையில் சிறுவர்கள் பண்டம் கேட்டதற்கு நீங்க வேற தெரு ஆட்க உங்களுக்கு தரக்கூடாது ஊர் கட்டுப்பாடு என்று கூறி தீண்டாமை செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது அந்த கடை சீல் வைக்கப்பட்டது.மேற்கண்ட நிகழ்வில் நடவடிக்கை எடுக்கப்பட்டது மிகவும் பாராட்டக்கூடியது. அதுபோலவே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் Tolet போர்டுகளிலும் மற்றும் Gated community apartment பிராமின்களுக்கு மட்டும் (Brahmin Only ) என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேற்கூறிய இரு நிகழ்விற்கும் எந்த அளவிலும் பாகுபாடு கிடையாது. இரண்டுமே தீண்டாமையின் வெவ்வேறு வடிவங்கள் தான்.இருப்பினும் வர்க்க நிலையில் கீழே உள்ளவர்கள் குற்றங்களுக்கு தண்டிக்கப்படுவது போல மேலே இருப்பவர்கள் தண்டிக்கப்படுவது கிடையாது. ஆகவே இவையும் தீண்டாமைக்குரிய குற்றங்களாக கருதப்பட வேண்டும். சாதி வெறியர்களின் கடைகள் சீல் வைக்கப்படுவது போல அதை வளர்த்து கொண்டு இருப்பவர்களின் குற்றங்களுக்கும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.” என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் தமிழகத்தில் தொடரும் நவீன தீண்டாமை ஒழிப்பதற்கு தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *