
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி இருபத்தி நான்கு வார்டுக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் உசிலம்பட்டி கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் மூலமாக கடன் பெற்று மாதந்தோறும் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கடன் தொகையை மாதந்தோறும் நகராட்சி நிர்வாகம் முறையாக மாதந்தோறும் செலுத்தாமல் 4 மாதங்கள் ஒருமுறை செலுத்தப்படுகிறது.இதனால் கூட்டுறவு சங்கத்திற்கு மாதந்தோறும் செலுத்தாமல் காலதாமதம் ஏற்படுவதால் கடன் சங்கத்தினர் அதற்குண்டான வட்டியும் செலுத்த வேண்டுமென தூய்மைப் பணியாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். மாதம் நகராட்சி நிர்வாகம் பணம் செலுத்துவதால் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.இதனை பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் எந்த ஒரு முறையான பதில் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர் இதனால் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .நகராட்சி ஆய்வாளர் சுசிலா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் பயனளிக்கவில்லை. மேலும், உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதற்கு முறையான தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.