உக்ரைன்-ரஷியா போர் 25-வது நாள்; ஹைப்பர் சோனிக் ஏவுகணை தாக்குதலை கையில் எடுத்த ரஷியா.!

கீவ்,உக்ரைன் மீது ரஷியா 25-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-மார்ச் 20*ரஷியா தனது சேதத்தை குறைக்க பேச்சுவார்த்தை தான் வாய்ப்பு – உக்ரைன் அதிபர்*ரஷிய படையெடுப்பை எதிர்த்து உக்ரைன் தீவிரமாக போராடி வருகிறது. நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள் தந்து உதவுகின்றன.இந்த நிலையில் உக்ரைனுக்கு அவ்வாறு நேட்டோ நாடுகள் ஆயுதங்கள் தரக்கூடாது என்று ரஷியா கண்டித்துள்ளது.*உக்ரைனில் 69 ராணுவ நிலைகள் மீது தாக்குதல்; அதிநவீன ஏவுகணைகள் வீசி ஆயுதக்கிடங்குகள் அழிப்புமார்ச் 19*குறைந்த விலையில் கச்சா எண்ணெய்: இந்தியா- ரஷியா ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக தகவல்*தாய்நாட்டை காக்க ரஷியாவுக்கு எதிராக போரிட முன்வந்த 98 வயது “பாட்டி”*உக்ரைன் மீது புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்*ரஷிய தாக்குதலில் காயமடைந்த உக்ரைனை சேர்ந்த பாலே நடன கலைஞர் ஆர்டியோம் தத்சிஷின் 3 வாரங்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.*உக்ரைனுக்கு எதிரான போரில் 14 400 ரஷிய வீரர்கள் பலியாகி உள்ளதாக உக்ரைன் கூறி உள்ளது.*புதினும் அவருடைய நெருங்கிய அரசியல் கூட்டாளிகளும் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட பேரழிவுகரமான பொருளாதாரத் தடைகளின் அளவு குறித்து பதற்றமாக உள்ளார்கள் என ரஷியாவின் முன்னாள் பிரதமர் மிகைல் காஸ்யனோவ் கூறியுள்ளார்.*ரஷியாவில், அதிபர் விளாடிமர் புதின், கிரிமியாவை இணைத்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் லுஷினிகி மைதானத்தில் நிரம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே பேசினார்.*பல்லாயிரக்கணக்கான ரஷியர்களுக்கு விளாடிமர் புதின் ஆற்றிய உரையின் முடிவு நேரத்தில், ரஷிய அரசுத் தொலைக்காட்சி திடீரென அவருடைய பேச்சைப் பாதி யில் துண்டித்துவிட்டு, தேசபக்தி பாடலை ஒளிபரப்பத் தொடங்கியது.*மேரியோபோல் நகரில் வான்வழித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட திரையரங்கின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 130 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.*லிவிவ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பராமரிப்பு ஆலை இன்று காலையில் தாக்கப்பட்டது. உயிர்சேதம் எவும் ஏற்படவில்லை. லிவிவ் போலந்து எல்லையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது.*புதின் பேச்சு பாதியிலேயே நிறுத்தம்; ரஷிய தொலைக்காட்சியால் பரபரப்பு*ரஷிய தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி:-*ரஷிய தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குழந்தைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தொட்டில் வண்டிகள் உக்ரைனின் லிவில் நகர கவுன்சில் அலுவலகத்திற்கு வெளியே பொதுஇடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

*ரஷிய தாக்குதலில் இதுவரை 109 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளை கொண்டு செல்லும் 109 தொட்டில் வண்டிகள் காலியாக நிறுத்தப்பட்டன.

*தீவிரமான பேச்சுவார்த்தை:-*உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ரஷியாவுடன் தீவிரமான பேச்சுவார்த்தை நடத்த நேரம் வந்துவிட்டது என்றார். நான் கூறுவதை அனைவரும் கேட்கவேண்டும். குறிப்பாக மாஸ்கோ. சந்திப்பு மற்றும் தீவிர பேச்சுவார்த்தை நடத்த நேரம் வந்துவிட்டது என ஜெலன்ஸ்கி கூறினார்.

*ரஷியாவிற்கு எதிரான பொருளாதார தடையில் நார்வே இணைந்தது*ரஷியாவின் தாக்குதலில் கடுமையான பாதிக்கப்பட்ட உக்ரைனின் சுமி நகருக்கு ஐநா சார்பில் அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகள் வந்தடைந்துள்ளன.

*உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த ரஷியாவுக்கு சீனா அழுத்தம் கொடுக்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சீனா உதவி செய்தால் இது உலக நாடுகளுடனான உறவை மேம்படுத்த உதவும்’ என்றார்.

*ரஷியா வீசிய குண்டுகள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் வெடிக்காமல் சிதறிக்கிடக்கின்றன. இந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச்செய்ய சில ஆண்டுகள் ஆகலாம் என உக்ரைன் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.*ரஷியா நடத்திய தாக்குதலில் உக்ரைனின் ஷபுர்ஷஷயா அனுமின்நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அனுமின்நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் நடவடிக்கையை உக்ரைன் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

*உக்ரைன் – ரஷியா இடையேயான போர் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பைடன் எச்சரித்திருந்தார். ஆனால், இந்த விவகாரத்தில் சீனா எத்தகைய விளைவுகளை சந்திக்கும் என்பது குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.

*உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு பெலாரஸ் ஆதரவு அளித்து வருகிறது. இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெலாரஸ் மீதும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக பெலாரஸ் நாட்டில் கோதுமை, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், பெலாரசுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க ரஷியா முடிவு செய்துள்ளது.

*அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்க்கு ஆயுத உதவிகளை வழங்கினால் சீனா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என சீன அதிபரிடம் அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *