
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயதங்களை அழித்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் டிரோன்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்கி வந்தன. அவை அந்நாடின் சப்போர்ஷியா நகரில் உள்ள விமானங்கள் நிறுத்தும் பெரிய கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் செவ்வாய் இரவு ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் சப்போர்ஷியா நகரில் இருந்த ஆயுதக் கிடங்கும் அழிக்ப்பட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் 59 ராணுவ நிலைகள் மீது கலிபிர் ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா மேலும் அறிவித்துள்ளது.