ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் 77 வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம் வெளியீடு.!

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 77 வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இதில் 6 பேர் வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றனர். இதன்மூலம் 77 வேட்பாளர்கள் போட்டியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரால் அதிகாரப்பூர்வமாக சனிக்கிழமை காலை வெளியிடப்பட்டது.

வேட்பாளர், சின்னங்களின் விவரம்: ஈவிகேஎஸ். இளங்கோவன்–கை சின்னம் (காங்கிரஸ்). கே.எஸ்.தென்னரசு- இரட்டை இலை (அதிமுக), எஸ்,ஆனந்த்- முரசு (தேமுதிக) ஆகிய 3 பேர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக போட்டியிடுகின்றனர்.மேனகா- கரும்பு விவசாயி (நாம் தமிழர்), அண்ணாதுரை-ஆட்டோ ரிக்‌ஷா (இந்து திராவிட மக்கள் கட்சி), அருண்குமார்-மோதிரம் (தமிழ்நாடு இளைஞர் கட்சி), அருள்ராம்-வைரம் (தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி), இரா.கபாகாந்தி-அன்னாசி (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி), கருணாகரன்-மிதிவண்டி (சமாஜ்வாடி), கிருஷ்ணமூர்த்தி-சிறு உரலும் உலக்கையும் (வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சி), குப்புசாமி-தொப்பி (உழைப்பாளி மக்கள் கட்சி), குமாரசாமி-பச்சை மிளகாய் (ஜனதா தளம்), சசிக்குமார்-பலாப்பழம் (அண்ணா புரட்சிதலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்), சுந்தரராஜன்-கடாய் (அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம்), தங்கவேல்-தர்பூசணி (தேசிய மக்கள் கழகம்), தனலட்சுமி-ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை (நாடாளும் மக்கள் கட்சி), பன்னீர்செல்வம்-உலங்கு வானூர்தி (இந்திய குடியரசுக்கட்சி), பிரேம்நாத்-அரவை சாதனம் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்), மணி-இஞ்சி (இந்திய குடியரசு கட்சி), மாதன்-வெண்டைக்காய் (இந்திய கணசங்கம்), முகமது ஹனீபா-கத்தரிக்கோல் (தமிழ்தாயக முன்னேற்ற கட்சி), முனியப்பன்-வளையல்கள் (அனைத்து ஓய்வு ஊதியதாரர்கள் கட்சி), ராம்குமார்-தலைக்கவசம் (இந்திய சுயராஜ்ய கட்சி), ராஜா-பிரஷர் குக்கர் (கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி), விஜயகுமாரி-கால்பந்து (தேசிய மக்கள் சக்தி கட்சி), விஜயகுமார்-பானை (விடுதலைக்களம் கட்சி), வேலுமணி-மின்கல விளக்கு (விஸ்வபாரத் மக்கள் கட்சி), ஜார்ஜ் பெர்னான்டஸ்-வாயு சிலிண்டர் (மண்ணின் மைந்தர்கள் கழகம்) ஆகிய 25 பேர் பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத தேசிய, மாநில அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக போட்டியிடுகின்றனர்.49 சுயேச்சை வேட்பாளர்கள்அன்பு மாணிக்கம்-பகடை, ஆறுமுகம்-கண்ணாடி டம்ளர், பெ.ஆறுமுகம்-ஈட்டி எறிதல், இசக்கிமுத்து-வெட்டுகிற சாதனம், ரமேஷ்-தலையணை, கண்ணன்-தென்னந்தோப்பு, கீர்த்தனா-மடிக்கணினி, குணசேகரன்-புல்லாங்குழல், குமார்-கணக்கீட்டுப்பொறி, கோபாலகிருஷ்ணன்-இரட்டை தொலைநோக்காடி, சசிகுமார்-பரிசு பெட்டகம், சதீஷ்குமார்-திருகி, சித்ரா-ஊன்றுகோல், சிவக்குமார்-கிரிக்கெட் மட்டை, சீனிவாசன்-டிஷ் ஆன்ட்டெனா, சுதாகர்-மின் கம்பம், சுந்தரமூர்த்தி-பலூன், செந்தில்குமார்- பேனாதாங்கி, தங்கவேல்-வார்ப்பட்டை, தரணிகுமார்-உணவு நிறைந்த தட்டு, தனஞ்ஜெயன்-புகைப்படக்கருவி, திருமலை-காலிபிளவர், தீபன் சக்கரவர்த்தி-ஒலிவாங்கி, நரேந்திரநாத்-தொலைபேசி, நூர் முகமது-அலமாரி, பத்மராஜன்-டயர்கள், பழனிசாமி-ஷு, பால்ராஜ்-எந்திரன், பிரதாப்குமார்-கிணறு, த.பிரபாகரன்-காலணி, மு.பிரபாகரன்- ட்ரக், புருசோத்தமன்-ஊதல், மணிகண்ணன்-தேனீர் வடிகட்டி, மயில்வாகனன்-கட்டில், மனோகரன்-சிதார், முகமது அலி ஜின்னா-உழவு கருவி, முத்து பாவா-குடிமக்கள், முகம்மது ஹபீல்-தீப்பெட்டி, ரவி-நீர் தொட்டி, ராகவன்-தொலைக்காட்சி பெட்டி, ராம்குமார்-கண்காணிப்பு கேமரா, ராஜா-கப்பல், ராஜேந்திரன்-இதயத்துடிப்பளவி, லோகேஷ்-சன்னல், வீரக்குமார்-இஸ்திரி பெட்டி, ஜெய்சங்கர்-வாளி, ஷம்சுதீன்-பிரஷ் ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *