இஸ்லாமியர்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வேண்டு கோள்.!

இஸ்லாமியர்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வேண்டு கோள் விடுத்துள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகம் முழுவதும் பள்ளி வாசல்களை சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் ரீயல் எஸ்டேட் மற்றும் கஷ்டத்தின் காரணமாகவோ அல்லது வேறு ஏதோ காரணத்திற்க்காக தாங்களின் சொத்துகளை விற்பனை செய்ய கூடிய சூழ்நிலை நிலை ஏற்பட்டால், தாங்களின் சொத்துக்களை இஸ்லாமிய சமுதாய மக்களுக்கே விற்பனை செய்ய வேண்டும். மேலும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் கருதி மார்வாடிகளுக்கு சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டாம் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம். ஏனென்றால் வடமாநிலத்தைச் சேர்ந்த மார்வாடிகள் இஸ்லாமிய சமுதாய மக்கள் அதிக அளவில் வசிக்க கூடிய பகுதியில் இஸ்லாமியர்களின் சொத்துகளுக்கு நல்ல விலை கொடுத்து வாங்கி வருகின்றனர் . மேலும் இஸ்லாமியர்களின் சொத்துகளுக்கு மார்வாடிகள் நல்ல விலை கொடுப்பதுனால் ஒரு சில இஸ்லாமியர்கள் பணத்திற்கு ஆசை பட்டு தங்களது சொத்துக்களை மார்வாடிகளுக்கே விற்பனை செய்து வருகின்றனர் . மேலும் பள்ளி வாசல்களில் தொழுகை நேரங்களில் குழாய் ஒலி பெருக்கியில் பாங்கு சத்தம் எங்களுக்கு தொந்தரவாக இருக்கு என்று பள்ளிவாசல்களில் பாங்கு சொல்லும் குழாய் ஓலி பெருக்கியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் வசிக்கும் மார்வாடிகள் அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு மற்றும் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளார்கள் என்பதை சுட்டி காட்ட விரும்புகின்றோம். மார்வாடிகளுக்கு இஸ்லாமியர்கள் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் அவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் பள்ளிவாசலை மூடும்படி அல்லது பாங்கு சொல்ல விடாமல் தடுக்க பெரும் அளவில் வாய்ப்புகள் உள்ளது என்பதை ஓவ்வொரு இஸ்லாமியர்களும் சிந்திக்க வேண்டும். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய ஜமாத்தார்கள், செல்வந்தர்கள் இவ்விசயத்தில் மெத்தனம் காட்டாமல் நாளைய சமுதாய இளைய தலை முறைகளுக்கு இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க மார்வாடிகளுக்கு தாங்களின் சொத்துக்களை விற்பனை செய்வதை இஸ்லாமியர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வேண்டு கோளை முன் வைக்கின்றோம். இவவாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *