இளம்பெண்களை வன்கொடுமை செய்து வீடியோ வெளியீடு.. RSS, ABVP மாணவர் தலைவர் அதிரடி கைது.!

கர்நாடக: கர்நாடக மாநிலம் தீர்த்தஹள்ளி தாலுகாவை சேர்ந்தவர் பிரதீக். கல்லூரி படித்துவரும் இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ABVP அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு செயல்படும் தாலுகா தலைவராக இருத்துவந்துள்ளார். இவர் அந்த அமைப்பில் இருப்பதால் பல பெண்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது. அப்படி அறிமுகம் கிடைக்கும் பெண்களுடன் தொடர்ந்து பேசிவந்த பிரதீக், நாளடைவில் அவர்களுக்கு நெருக்கமாகியுள்ளார். மேலும், அவர்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி அவ்ர்களிடம் அந்தரங்கமாக பேசியுள்ளார்.

மேலும், அவர்களுடன் நெருக்கமாக இருந்து அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.இப்படி பல பெண்களை ஏமாற்றிவந்த பிரதீக் திடீரென தன்னிடம் இருந்த அந்த புகைப்படம், மற்றும் விடீயோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த விடீயோக்கள் அடுத்தடுத்து பரவிய நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட அந்த மாணவிகளின் உறவினர்கள் இது குறித்து தொடர்ச்சியாக காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், உடனடியாக போலிஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

தொடர்ந்து ABVP அமைப்பைச் சேர்ந்த பிரதீக்கை கைது செய்தனர். அதன்பின்னர் அவரின் மொபைல் போன் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த வீடியோயை யாரும் பகிரவேண்டாம் என போலிஸார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாரும் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *