
இலங்கை பிரதமர் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் ஏராளமான பொதுமக்கள் பிரதமர் இல்லம் அமைந்துள்ள அலரி மாளிகையில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வருவதால் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனால் அதிபர் கோத்தபர ராஜபட்ச பதவி விலகினார்.போராட்டக்காரர்கள் பிரதமர் மற்றும் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் இல்லத்தின் அனைத்து அறைகளில் உள்ள உடமைகளையும் சேதப்படுத்தி போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.பிரதமர் இல்லத்தில் பாரம்பரியம்மிக்க பல பொருள்களை போராட்டக்கார்கள் சேதப்படுத்தியுள்ளதாக கொலம்பியா போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், பல புராதானப் பொருள்கள் சேதமடைந்ததுடன், அதிக விலைமதிப்புடைய பொருள்கள் காணவில்லை எனவும் பிரதமர் அலுவகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் பிரதமர் இல்லத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.