
உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் 56 பணியாளர்கள் பணி நீக்கத்தை கண்டித்து உளுந்துர்பேட்டை செங்குறிச்சியில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர்ந்து 18-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுங்கச்சாவடி இயங்காமல் இருந்தது. திடீரென 16ம் அன்று இரவு வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு வைத்து சுங்கச்சாவடி நிறுவனம் சுங்கச்சாவடியை இயக்கி வருகிறது. இதனால் போராட்டம் நடத்தி வரும் சுங்கச்சாவடி ஊழியர்கள் நேற்று இன்று நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் இந்த வகையில் நேற்று நாமும் போட்டுக் கொண்டு பிச்சை எடுத்தும் இன்று கருப்பு துணியை கண்ணில் கட்டிக் கொண்டும் தங்கள் எதிர்ப்பை போராட்டத்தின் வாயிலாக காட்டி வருகின்றனர். மேலும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் TTPL மற்றும் SKM நிர்வாகம் வடமாநில தொழிலாளர்களை கொண்டு சுங்கச்சாவடியை இயக்கி வருவதால் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதால் சுங்கச்சாவடி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.