இந்திய விமானப்படை ஆண் மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தகவல்.!

விழுப்புரம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஆண் இந்திய குடிமக்களை விமானப்படை குழு ‘ஒய்’ மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்ப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான ஆள்சேர்ப்பு தேர்வு சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் இன்று(புதன் கிழமை) முதல் 8-ந் தேதி வரை வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது. மருத்துவ உதவியாளர் பணிக்கு திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலத்துடன் 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும், 27.6.2002 முதல் 27.6.2006 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். இப்பணிக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்களுக்கு உடல்தகுதித் தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவை இன்றும்(புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நடத்தப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து 12-ம் வகுப்பு, (டிப்ளமோ, பி.எஸ்சி., மருத்துவம்) படித்து முடித்த திருமணம் ஆகாதவர்கள் 27.6.1999 முதல் 27.6.2004 வரையான காலத்தில் பிறந்தவராகவும், திருமணமான விண்ணப்பதாரர்கள் 27.6.1999 முதல் 27.6.2002 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.3 தேர்வுகள்பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் ராணுவ சேவை ஊதியம் உள்பட குறைந்தபட்ச மொத்த ஊதியம் ரூ.26,900 ஆகும். இப்பணிக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்களுக்கு உடல்தகுதித்தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்துவ தேர்வு ஆகிய தேர்வுகள் வருகிற 7, 8 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். இதற்கு உயரம் 152.5 செ.மீட்டர் இருக்க வேண்டும். எனவே ஆர்வமுள்ளவர்கள் https://airmenselection.cdac.in/CASB/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து தேர்வுமுறை, தேர்வு நாளன்று எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள் உள்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரிலோ அல்லது 04146-226417 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு இளைஞர்கள் பயனடையலாம். என் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *