இந்திய பொருளாதாரம் 9.27% ஆக வளர்ச்சி காணும்.. பட்ஜெட்டில் நம்பிக்கை கொடுத்த அறிவிப்பு..!

நாட்டின் பல்வேறு நெருக்கடிக்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட்டினை தாக்கல் செய்து வருகின்றார்.ஒரு புறம் ஒமிக்ரான் தாக்கம் என்பது மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் சிறிய அளவிலான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்து முந்தைய ஆண்டுகளை காட்டிலும் குறைவு தான் என்றாலும், இதுவும் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இரவு நேர லாக்டவுன் கட்டுப்பாடுகள், வார இறுதியில் கட்டுப்பாடுகள், மாபெரும் தடுப்பூசி முகாம்கள், தடுப்பூசி விகிதமானது பெரியளவில் அதிகரிப்பு, பூஸ்டர் டோஸ் என அனைத்தும் பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சிலிண்டர் விலை 91.5 ரூபாய் குறைப்பு.. பட்ஜெட்-க்கு இன்ப அதிர்ச்சி..!தடுப்பூசி விகிதம் அதிகம்உண்மையில் முதல் இரண்டாம் கட்ட அலையின்போது தடுப்பூசி விகிதங்களும் மிக குறைவாகவே இருந்தன. அதோடு கட்டுப்பாடுகளும் மிக அதிகமான இருந்தன. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை தவிர வேறு எதற்காகவும்க் வெளியில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது மூன்றாவது அலையானது இருந்து வந்தாலும், கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் எந்த செயல்பாடுகளும் நிறுத்தப்படவில்லை.பொருளாதார வளர்ச்சிஇதற்கிடையில் தான் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதமானது 9.27% ஆக வளர்ச்சி காணும் என நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கட்டுப்பாடுகளும் அதிகம் இல்லாத இந்த மூன்றாவது அலைக்கு மத்தியில் அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவித்து வருகின்றன.அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள்குறிப்பாக நாட்டின் உற்பத்தி விகிதத்தினை ஊக்குவிக்கும் விதமாக சுயசார்பு இந்தியா திட்டம், பிஎல்ஐ திட்டம், ஆத்ம நிர்பார் திட்டம் மூலம் தனியார் முதலீடுகளை அதிகரிப்பதோடு, உற்பத்தியும் அதிகரிக்கும். இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஓமிக்ரான் தாக்கம் இருந்தாலும், அது பொருளாதாரத்தில் பெரியவிலான பாதிப்பினை ஏற்படுத்தாது என நம்ப படுகின்றது.தடுப்பூசி + பிஎல்ஐ திட்டம்குறிப்பாக அரசின் பி எல் ஐ திட்டம் மூலம் 14 துறைகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பட்ஜெட்டில் தாக்கலின் போது 14 துறைகளில் மிக நல்ல வரவேற்பு பி எல் ஐ திட்டத்திற்கு இருப்பதாக கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது. இதன் மூலம் வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. முதலீடுகளும் பெருகியுள்ளது. இதன் மூலம் நுகர்வும் அதிகரிக்கும். தேவையும் அதிகரிக்கும். மொத்தத்தில் சங்கிலித் தொடராக உற்பத்தியினை ஊக்குவிக்கும். இது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். இதற்கிடையில் தடுப்பூசி விகிதங்களும் மிக போடப்பட்டு வரும் நிலையில், இது மேற்கோண்டு சாதகாம அமைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *