
இந்தியா – பூடான் எல்லையோரம் புதிய கிராமங்களை அமைத்து மக்களை குடியேற்றுவதில், சீனா அடாவடியாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் தைவானை மீட்டு, திபெத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அகண்ட சீனாவை உருவாக்க அதிபர் ஷீ ஜிங்பிங் சூழ்ச்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.நம் அண்டை நாடான பூடானின் டோக்லாம் பள்ளத்தாக்கு அருகே மும்முனை சந்திப்பு தொடர்பான எல்லை பிரச்னையில் இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் அங்குள்ள அமு சூ பகுதியில் புதிய கிராமங்களை சீனா அமைத்து வருகிறது.சீனாவின் கனவுஅத்துடன் குடியிருப்புகள் கட்டி ஏராளமான மக்களை குடியேற்றி வருகிறது. சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. புதிய கிராமங்களில் கார்கள் வரிசையாக செல்லும் காட்சிகள் செயற்கைக்கோள் படங்களில் காணப்படுகின்றன. சீனா, பூடான் எல்லையில் மேற்கொண்டு வரும் இந்த ஆக்கிரமிப்பு முயற்சி, புதிய குடியேற்றம், எல்லை விரிவாக்கம் உள்ளிட்ட அடாவடி நடவடிக்கைகளை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது.இந்தியா உடன், 3,488 கி.மீ., பூடான் உடன், 477 கி.மீ., எல்லையை சீனா பகிர்ந்துஉள்ளது. இந்த எல்லை நெடுகிலும் புதிய மாதிரி கிராமங்களை அமைத்து, மக்களையும், முன்னாள் ராணுவத்தினரையும் குடியேற்ற வேண்டும் என்பதே ஜிங்பிங்கின் திட்டம்.இதோடு, ஆக்கிரமித்த திபெத்தின் தன்னாட்சி அமைப்பிற்கு முடிவு கட்டி சர்வதேச அங்கீகாரம் பெறுவதும் சீனாவின் கனவாக உள்ளது. அதேபோல, சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் சன்னி முஸ்லிம்களின் ஆதிக்கத்தை ஒடுக்கி, தன் ஆளுமையை உறுதிப்படுத் தவும் சீனா துடிக்கிறது.இந்தியாவில், 2020ல் கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது. இதையடுத்து இரு நாடுகளின் ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க, பல கட்ட பேச்சு நடந்தது. அதில் முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், இன்னும் சில பகுதிகளில் சீன ராணுவம் பின் வாங்க மறுத்து வருகிறது. இது தொடர்பாக இறுதியாக 17ம் தேதி இந்தியா – சீனா ராணுவ தளபதிகள் இடையே நடந்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கின் குக்ரங் நுல்லா பகுதியில் இருந்து சீன ராணுவம் வெளியேற ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசு தீவிர முயற்சிகிழக்கு லடாக்கில் பதற்றத்தை தணிப்பதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்காத போதிலும், அங்கு இயல்பு நிலை திரும்ப, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய எல்லையில், 65 முனையங்களில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெப்சங் பல்ஜி, சார்தி நுல்லா பகுதியில் எல்லை ரோந்து பணியை சீன ராணுவம் தடுக்கக் கூடாது என, இந்தியா வலியுறுத்தியுள்ளது. கடந்த 1993 மற்றும் 1996ல் இந்தியா – சீனா இடையே எல்லை தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தப்படி அதிபர் ஜிங்பிங் நடந்து கொள்ள வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தாண்டு இறுதியில் மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜிங்பிங் தேர்வு செய்யப்பட உள்ளார். அதன்பின், தைவானை சொந்தம் கொண்டாடும் முயற்சி தீவிரமாகும் என தெரிகிறது.அத்துடன், ராணுவ பலத்தால், திபெத் மற்றும் சன்னி முஸ்லிம் ஆதிக்கத்தில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தை முழுமையாக தன் கீழ் கொண்டு வர சீனா தீவிரம் காட்டும் என்பது நிச்சயம்.இது, அகண்ட சீனாவை உருவாக்கும் ஜிங்பிங் சூழ்ச்சிக்கு வலுசேர்க்கும் என, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.சீனாவின் கனவுஅத்துடன் குடியிருப்புகள் கட்டி ஏராளமான மக்களை குடியேற்றி வருகிறது. சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. புதிய கிராமங்களில் கார்கள் வரிசையாக செல்லும் காட்சிகள் செயற்கைக்கோள் படங்களில் காணப்படுகின்றன. சீனா, பூடான் எல்லையில் மேற்கொண்டு வரும் இந்த ஆக்கிரமிப்பு முயற்சி, புதிய குடியேற்றம், எல்லை விரிவாக்கம் உள்ளிட்ட அடாவடி நடவடிக்கைகளை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது.இந்தியா உடன், 3,488 கி.மீ., பூடான் உடன், 477 கி.மீ., எல்லையை சீனா பகிர்ந்துஉள்ளது. இந்த எல்லை நெடுகிலும் புதிய மாதிரி கிராமங்களை அமைத்து, மக்களையும், முன்னாள் ராணுவத்தினரையும் குடியேற்ற வேண்டும் என்பதே ஜிங்பிங்கின் திட்டம்.இதோடு, ஆக்கிரமித்த திபெத்தின் தன்னாட்சி அமைப்பிற்கு முடிவு கட்டி சர்வதேச அங்கீகாரம் பெறுவதும் சீனாவின் கனவாக உள்ளது. அதேபோல, சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் சன்னி முஸ்லிம்களின் ஆதிக்கத்தை ஒடுக்கி, தன் ஆளுமையை உறுதிப்படுத் தவும் சீனா துடிக்கிறது.இந்தியாவில், 2020ல் கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது. இதையடுத்து இரு நாடுகளின் ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க, பல கட்ட பேச்சு நடந்தது. அதில் முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், இன்னும் சில பகுதிகளில் சீன ராணுவம் பின் வாங்க மறுத்து வருகிறது. இது தொடர்பாக இறுதியாக 17ம் தேதி இந்தியா – சீனா ராணுவ தளபதிகள் இடையே நடந்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கின் குக்ரங் நுல்லா பகுதியில் இருந்து சீன ராணுவம் வெளியேற ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசு தீவிர முயற்சிகிழக்கு லடாக்கில் பதற்றத்தை தணிப்பதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்காத போதிலும், அங்கு இயல்பு நிலை திரும்ப, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய எல்லையில், 65 முனையங்களில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெப்சங் பல்ஜி, சார்தி நுல்லா பகுதியில் எல்லை ரோந்து பணியை சீன ராணுவம் தடுக்கக் கூடாது என, இந்தியா வலியுறுத்தியுள்ளது. கடந்த 1993 மற்றும் 1996ல் இந்தியா – சீனா இடையே எல்லை தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தப்படி அதிபர் ஜிங்பிங் நடந்து கொள்ள வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தாண்டு இறுதியில் மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜிங்பிங் தேர்வு செய்யப்பட உள்ளார். அதன்பின், தைவானை சொந்தம் கொண்டாடும் முயற்சி தீவிரமாகும் என தெரிகிறது.அத்துடன், ராணுவ பலத்தால், திபெத் மற்றும் சன்னி முஸ்லிம் ஆதிக்கத்தில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தை முழுமையாக தன் கீழ் கொண்டு வர சீனா தீவிரம் காட்டும் என்பது நிச்சயம்.இது, அகண்ட சீனாவை உருவாக்கும் ஜிங்பிங் சூழ்ச்சிக்கு வலுசேர்க்கும் என, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
Itís difficult to find educated people about this topic, but you seem like you know what youíre talking about! Thanks