இந்திய எதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதியாக இருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிகள்; பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி மத்திய சட்டத்துறை அமைச்சர் கருத்துக்கு வழக்கறிஞர்கள் கண்டனம்.!

புதுடெல்லி: இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கதுறை என நாட்டில் பல்வேறு தன்னாட்சி அமைப்புகளை வளைத்து தாங்கள் சொல்வதையே கேட்கும் அமைப்பாக மாற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நீதித்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றது பாஜக அரசு அதன் காரணமாக பாஜகவிற்கு அடிப்பணியியும் சிலருக்கு நீதிபதி பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவர்களின் அந்த முயற்சிக்கு முன்னாள் நீதிபதிகள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே ‘இந்திய அரசியல்’ குறித்து தில்லியில் ‘இந்தியா டுடே’ சார்பில் கடந்த மார்ச் 21-ம் தேதி கருத்தரங்கு நடைபெற்றது.

அப்போது அதில் கலந்துகொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் பேசிய கிரண் ரிஜிஜு “இந்திய எதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதியாக இருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், நீதித்துறையை எதிர்க்கட்சியாக நடிக்க வற்புறுத்துகிறார்கள்” என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ‘‘அனைத்து அமைப்புகளும் சரியானவை அல்ல, ஆனால், இது நாம் உருவாக்கிய சிறந்த அமைப்பு. இதன் நோக்கம் நீதித்துறை யின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகும், இது ஒரு முக்கிய மதிப்பாகும்.நீதித்துறை சுதந்திரமாக இருக்க வேண்டுமானால், நீதித்துறையை வெளிப்புற தாக்கங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். உணர்வில் வேறுபாடு இருப்பதில் என்ன தவறு? ஆனால், அத்தகைய வேறுபாடு களை நான் வலுவான அரசியலமைப்பு, அரசியல் உணர்வுடன் கையாள வேண்டும். நான் சட்ட அமைச்சருடன் பிரச்சனைகளில் ஈடுபட விரும்பவில்லை, கருத்து வேறுபாடுகள் இருக்க வேண்டும். நான் நீதிபதியாக இருந்த 23 ஆண்டு களில் ஒரு வழக்கை எப்படி தீர்ப்பது என்று யாரும் சொல்லவில்லை. அரசாங்கத்திடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லை.

நீதித்துறைக்கு எந்த அழுத்தமும் இல்லை என்பதற்கு தேர்தல் ஆணையம் தொடர்பான தீர்ப்பு ஒரு சான்று” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சரின் கருத்திற்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அந்த கருத்துக்களை திரும்பபெறவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சருக்கு 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *