இந்தியாவில் மீண்டும் புத்துணர்வு பெறும் பௌத்தம்; பள்ளி கட்டிடம் கட்டும் பணி தூங்கும் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை.!

தோண்டி எடுக்கப்பட்ட புத்தரின் சிலை

இந்திய முழுவதும் பல்வேறு இடங்களில் பூமிக்கு அடியில் புத்தர் சிலை இருப்பது அண்மை காலமாக கண்டுபிடிக்கப்பட்டு அதனை தொல்லியல் துறை நிபுணர்கள் எந்த நூற்றாண்டை சார்ந்தது என ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர் அது மட்டும் இன்றி ஒருபுறம் பௌத்த ஆய்வாளர்களும் அம்பேத்கரிய சிந்தனையாளர்களும் இந்தியா வரலாறு என்பதே பெளத்தத்திற்க்கும் பார்பனியத்திற்க்கும் இடையே நிகழ்ந்த மோதல்களே.! பெளத்தம் வீழ்த்தப்பட்டு பார்பனியம் சூழ்ச்சியால் வென்றது.! என்ற அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகளை மெய்பிக்ககும் வகையில், 2020 மே மாதம் ராமர் கோவில் கட்ட நிலத்தைத் தோண்டியபோது சிவ லிங்கம் கிடைத்ததாக செய்திகள் வெளியாகின. அதே நேரத்தில் அங்கு புத்த கோவில் இருந்ததாகவும் அதை உறுதி செய்யும் வகையில் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அயோத்தியில் புத்தர் சிலை கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.

அயோத்தியில் கிடைக்கப்பட்ட புத்தர் சிலை

இதைத் தொடர்ந்து பீகார் மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளிலும் கிடைக்கப் பட்டது செய்திகள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள தேவதானம் ஊராட்சியில் அடங்கியது குமரசிறுளப்பாக்கம் கிராமம். இங்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் பழமையானதல் அரசு உத்தரவின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. மீண்டும் அந்தப் பகுதியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்த நிலையில் பொக்லைன் இயந்திர உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டது.

அப்போது மண்ணில் மர்மமான பொருள் இருப்பது தெரியவந்தது. அதை சுத்தப்படுத்திய போது பழங்கால புத்தர் சிலை என்பது தெரியவந்தது. தகவலறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொதுமக்கள் திரண்டனர் பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிஎட்டியப்பன் கிராம பொதுமக்கள் முன்னிலையில் பொன்னேரி தாசில்தாரிடம் புத்தர் சிலையை ஒப்படைத்தார் மேலும் இந்த சிலை எந்த நூற்றாண்டு சார்ந்தது என்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளனர். அம்பேத்கர் பௌத்த ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *