
ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் கங்காருகள் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் மாயமாய்தோன்றியுள்ளன.தங்கள் இயற்கை வாழ்விடத்திலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தாண்டி இவை எப்படி இந்தியாவுக்கு வந்தன என்று வன அதிகரிகள் குழப்பத்தில் உள்ளனர்.அண்மையில் சில்குரி எனும் இடத்திலிருந்து மூன்று கங்காருகள் மீட்கப்பட்டன. ஒரு மடிந்த கங்காரு குட்டியும் கண்டெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட விலங்குகள் கொல்கத்தா விலங்கியல் தோட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.கங்காருகள் சாலையோரம் புல் தின்னும் காட்சிகளைப் பலர் காணொளி எடுத்து பகிர்ந்துவருகின்றனர். கங்காருகளைக் கண்ட பல பொதுமக்கள் அவை விலங்கியல் தோட்டத்திலிருந்து தப்பித்திருக்கக்கூடும் என்று கருதினர். ஆனால் அது உண்மையல்ல என அதிகாரிகள் கூறினர்.நேப்பாளம் வழியாக இந்தியாவுக்குள் கங்காருகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது. ஆனால் கடத்தலுக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. கங்காருகளை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்க அவை இந்தியாவுக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்பது சிலரது ஊகம்.