
டெல்லி: தலைநகர் டெல்லி உட்பட 4 முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்கிறது. SBI, ICICI, Yes Bank, ITFC, FIRST Bank வங்கிகளில் செயல்பாட்டுக்கு வருகிறது.
டிஜிட்டல் கரன்சியானது, மக்களுக்கு நிதி பரிவர்த்தனைகளுக்காக, மோசடி ஆபத்து இல்லாத மெய்நிகர் கரன்சியாக இருக்கும். இது காகித நாணயத்தை ஒத்தது. சாதாரண ரூபாயின் மதிப்பையே கொண்டிருக்கும். வெளியில் புழங்கும் கரன்சியின் மின்னணு வடிவமே இது. என்றும் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.