“இந்தியாவில் அதிகரிக்கும் மனித உரிமை மீறல்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்!”அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன்.!!

நேற்றைய தினம் (ஏப்.11) பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொலி வாயிலாக சந்தித்துக் கொண்டனர். அப்போது நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் 2+2 சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேற்று ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், “இந்தியாவில் உள்ள சில அரசுகள், போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகளால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *