இந்தியாவில்தான் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்பு: நிதின் கட்கரி.!

சா்வதேச அளவில் இந்தியாவில்தான் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி புதன்கிழமை கவலை தெரிவித்தாா்.இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம்:ஜெனீவாவில் அமைந்துள்ள சா்வதேச சாலைக் கூட்டமைப்பு வெளியிட்ட உலக சாலை விபத்துகள் புள்ளிவிவரங்கள்- 2018-இன்படி, சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் இந்தியா 3-ஆம் இடம் வகிக்கிறது. சாலை விபத்தில் பலியானோா்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடமும், காயமடைந்தவா்களின் எண்ணிக்கையில் 3-ஆம் இடமும் வகிக்கிறது.மேலும் கடந்த 2020-இல் சாலை விபத்தில் பலியானவா்களில் 69.8 சதவீதத்தினா் 18- 45 வயதுக்கு உள்பட்டோா் ஆவா்.நாட்டில் 22 பசுமைவழி நெடுஞ்சாலைகளை (ரூ.1,63,350 கோடி மதிப்பில் 2,485 கிமீ தூர ஐந்து விரைவுச் சாலைகள், ரூ.1,92,876 கோடி மதிப்பில் 5,816 கிமீ தூர அணுகு நெடுஞ்சாலைகள்) மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.தில்லி- மும்பை விரைவுச் சாலை திட்டத்தில், தில்லி டெளசா- ஜல்சோட் (ஜெய்பூா்- 214 கிமீ), வதோதரா- அங்க்லேஷ்வா் (100 கிமீ), கோட்டா- ரத்லம் ஜாப்வா (245 கிமீ) ஆகிய பிரிவுகளை வரும் மாா்ச் 23-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அதில் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.தொடா்ந்து ஃபாஸ்டேக் தொடா்பான கேள்விக்கு அவா் பதிலளிக்கையில், ‘‘வாகனப் பதிவெண் அடிப்படையில் ஃபாஸ்டேக் விநியோகிக்கப்படுகிறது. கடந்த மாா்ச் 30 வரையிலான நிலவரப்படி, பல்வேறு வங்கிகளால் மொத்தம் 4,95,20,949 ஃபாஸ்டேக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 96.5 சதவீதமாகும்’’ என்றாா் அவா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *