
உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையினருக்கு இன்னமும் கரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.ஆப்ரிக்காவில் 83 சதவீத மக்களுக்கும், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் 70 சதவீதம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னால் மட்டுமல்ல, எவரொருவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. உலகின் பணக்காரர்கள் கரோனா தடுப்பூசியின் பலனை அதிகளவில் அனுபவிக்கும்போது, ஏன் அது உலகின் ஏழை மக்களுக்கு கிடைப்பதில்லை? சிலரின் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையை விட அவ்வளவு உயர்ந்ததா? என்றும் டெட்ரோஸ் அதானோம் கேள்வி எழுப்பியுள்ளார்.