
ஆஸ்ரமத்திற்கு பூஜைக்காக சென்ற கல்லூரி மாணவி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த வெள்ளாத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆஸ்ரமம் நடத்தி வருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்களுக்கு பரிகார பூஜை செய்தும், பச்சிலை மூலிகை கொடுத்தும் வந்துள்ளார் முனுசாமி. இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி ஆஸ்ரமத்திற்கு வந்த ஹேமமாலினி என்ற கல்லூரி மாணவி திடீரென மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் பரிசோதித்ததில் அந்த மாணவி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.poisonஇதனையடுத்து, பென்னலூர்பேட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கல்லூரி மாணவி ஹேமமாலினி, தமது அக்காவுடன் கடந்த 13ஆம் தேதி இரவு ஆஸ்ரமத்திற்கு சென்ற நிலையில், 14ஆம் தேதி காலையில் மாணவி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாகவும், ஆஸ்ரமத்தின் உள்ளே கல்லூரி மாணவி விஷம் அருந்தி உயிரிழந்த நிலையில், சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்துள்ள பென்னலூர்பேட்டை போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

