
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆற்றுக்குள் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளன. இந்தியாவில் முதல்முறையாக ஆற்றில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஹூக்ளி நதியில் 33 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இத்திட்டத்துக்கான ஆரம்பப் பணிகள் 2006 -07ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தொடங்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்துக்கு ரூ. 4,874 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி ரூ. 8,575 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையவுள்ளது.இந்நிலையில், ஹூக்ளி நதியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் 80 சதவிகிதம் நிறவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிலையப் பணிகளின் மேற்பார்வையாளர் மிதுன் கோஷ் தெரிவித்துள்ளார்.இன்னும் 20 சதவிகிதப் பணிகள் எஞ்சியுள்ள நிலையில், திட்டமிட்டபடி ஜூன் மாதம் இத்திட்டம் தொடங்கப்படாது என்றும் குறிப்பிட்டார். இதனால் இப்பணிகள் முடிவடைந்து 2023ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.