
மத்தியப் பிரதேச: மத்திய பிரதேசம் ஷியோபூரில் 10 வயது சிறுவனை முதலை அப்படியே விழுங்கியதாகக் கூறப்படுகிறது. திங்கட்கிழமை காலை சம்பல் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை முதலை தாக்கியுள்ளது. குளித்துக் கொண்டு இருந்த சிறுவனை முதலை ஆற்றில் இழுத்துச் சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதைப் பார்த்ததும் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக சிறுவனின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், தடிகள், கயிற்றைக் கொண்டு முதலையை அங்குள்ளவர்கள் பிடித்தனர். அந்த முதலையை அவர்கள் ஆற்றில் இருந்து வெளியே இழுத்துப் போட்டனர். சிறுவனை அந்த முதலை நேற்று காலை விழுங்கி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் முதலையைக் காக்கும் சிறப்புக் குழுவும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்தனர்.இரு குழுக்களும் கிராம மக்களின் பிடியில் இருந்து முதலையை மீட்க முயன்றனர். மாலை வரை சிறுவனின் குடும்பத்தினர் முதலையை விடுவிக்கச் சம்மதிக்கவில்லை. முதலையின் வயிற்றில் குழந்தை உயிருடன் இருக்கும் என்றும் குழந்தையை வெளியே எடுத்த பின்னரே முதலையை விடுவிப்போம் என்றும் 10 வயது சிறுவனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்..இதுகுறித்து ரகுநாத்பூர் காவல் நிலையப் பொறுப்பாளர் ஷியாம் வீர் சிங் தோமர் கூறுகையில், “சம்பல் ஆற்றில் அந்த சிறுவன் குளித்துக் கொண்டு இருந்தான். அப்போது அந்த சிறுவன் எதிர்பார்க்காத வகையில் ஆழமாகச் சென்றுவிட்டான். அந்த சமயத்தில் தான் குழந்தையை முதலை விழுங்கியதாகக் கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அவர்களாகவே முதலையைப் பிடித்தனர். இந்த விவகாரத்தில் முதலை சிறப்புக் குழு அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது” என்றார்.பொதுவாக முதலை எந்தவொரு விலங்கையும் விழுங்கிவிட்டால், அவர்கள் உயிருடன் இருக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இதனைக் கஷ்டப்பட்டுச் சிறப்புக் குழுவினர் அந்த கிராம மக்களுக்குப் புரிய வைத்து உள்ளனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னரே, சிறப்புக் குழுவினர் சொன்னதைக் கேட்டு கிராம மக்கள் முதலையை விடுவித்தனர்.
sildenafil 100mg sildenafil rx coupon viagra free sample
Hi there! This post could not be written much better! Looking at this post reminds me
of my previous roommate! He constantly kept preaching about this.
I am going to forward this information to him. Pretty sure he’ll have a great read.
Thank you for sharing!