
ஆற்காடு: ஆற்காடு தொழிலதிபரும், திமுக பிரமுகருமான ஏ.வி.சாரதி வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான இடங்களில் புதன்கிழமை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏ.வி.சாரதி. இவர் சிமெண்ட் ஏஜென்சி, மற்றும் கல்குவாரி நடத்தி வருகிறார். ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளராக பதவி வகித்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்து செயல்பட்டுவருகிறார்.
இந்நிலையில், புதன்கிழமை காலைலிருந்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இவருக்கு சொந்தமான வீடு, வேலூர் சாலையில் உள்ள அலுவலகம், திமிரி அருகே உள்ள கல்குவாரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போதுயாரையும் அனுமதிக்கவில்லை இதனால் ஆற்காடு பகுதியில் பெரும்பரப்பு ஏற்பட்டுள்ளது.