
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாட்டின் 51 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதிகோரி தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறையிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பு தாக்கல் செய்திருந்தது. இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில் அவ்வமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனு மீதான விசாரணையின் போது ஊர்வலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளை கடைபிடிப்பது குறித்து உறுதியளித்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.