
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சின்னவரிகம் பகுதியில் பரிதா ஷூ கம்பெனிக்கு சொந்தமான ஜாப் ஒர்க்ஸ் பார்ஸ்ன் என்ற காலனி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இன்று இரவு 6:00 மணிக்கு இங்கு வேலை முடிந்து தொழிலாளர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் இரவு 7:30 மணிக்கு தொழிற்சாலை திடிரென தீ பிடித்து எரிந்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஷூ தயாரிக்கும் இயந்திரம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் இருந்த ஷூ க்கள், தோல் பொருட்கள் எரிந்து சாம்பலானது.ஆம்பூர் தீயணைக்கும் துறையினர் தீயை அணைக்க முயன்று வருகின்றனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது உம்மராபாத் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.தீ விபத்து ஏற்பட்ட போது தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயர் சேதம் ஏற்படவில்லை. வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த வாரம் இந்த தொழிற்சாலையில் தொடர்ந்து ஐந்து நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.