
கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியை சார்ந்த திருவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரியில் கிட்டதட்ட 500 க்கும்மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இவர்கள் மிகவும் பின் தங்கிய குடும்பத்தை சார்ந்தவர்கள் இவர்கள் நெடுஞ்சாலையில் இருந்து ஓட்டேரிக்கு செல்வதற்கு கெடிலம் நதியை கடந்து தான் செல்ல வேண்டும். மழைகாலங்களில் கெடிலம் நதியின் இரு புறங்களிலும் மழைநீர் வெள்ளமென கரைபுரன்டு ஓடும் நிலையில் அம்மக்கள் 3 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு திருமாணிக்குழி சுந்தரவாண்டி சாலை வழியாகவோ அல்லது திருவந்திபுரம் நிலத்தில் உள்ள கரடு முரடான பாதையின் வழியாக கடலூர் செல்லவேண்டும். இங்கு வசிக்கும் பொதுமக்கள் அத்தியவாசிய பொருட்களை வாங்கவோ அல்லது படிக்கின்ற மாணவ செல்வங்கள் பள்ளி கல்லூரிகளுக்கோ கடலூர் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். இவர்களின் அவல நிலையை கண்டு மாவட்ட நிர்வாகம் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தரைபாலம் அமைக்க ராட்சச உறையை கொண்டு வந்து இறக்கினார்கள் அந்த வேலை நடக்கும் போது ஒரு தொழிலாளி இறந்து விட்டகாரணத்தால் அந்த வேலையானது அப்படியே கிடப்பில் போடப்பட்டன. அப்பகுதி மக்களின் துயரை போக்க மாவட்ட ஆட்சியாளர் தனி கவனம் செலுத்தி கெடிலம் நதிகரையில் தரைபாலம் அமைத்து கொடுத்து அம்மக்களின் துயரை போக்க வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் பாலவீரவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.