ஆதரவற்ற பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் காவலர்..! அழகான பெண் குழந்தை பிறந்தது; விசாரணையில் அதிர்ச்சி.!

வேலூர்: தெற்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக வேலை செய்பவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்தார். காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்த போது காவல் நிலையம் எதிரே உள்ள ஜவுளி கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுது கொண்டு இருந்தார்.பெண் ஒருவர் அழும் சத்தத்தை கேட்ட இளவரசி அவரது அருகில் சென்று பார்த்தார். அப்போது இளம் பெண் ஒருவர் பிரசவ வலியால் அழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இளம் பெண்ணுடன் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று இருந்தது. உடனே சக காவலர்களை அழைத்து வந்த இளவரசி அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் பத்மநாபன், பெண் காவலர் சாந்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்று பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து பதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லாண்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி போது பெண் கூறியதாவது, திருமணம் ஆன சில மாதங்களில் கணவர் தன்னை விட்டு விட்டு சென்றதாகவும், தனது அண்ணன்கள் பிச்சை எடுத்து பணம் தரம் வேண்டும் என வற்புறுத்துவதாகவும் தெரிவித்தார். இதனால் இப்பகுதியில் பிச்சை எடுத்து வருவதாகவும் கூறினார் இந்த செய்தியை கேட்டு காவலர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பெண் போலீஸ் இளவரசி குழந்தைக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தார். ஆதரவற்ற பெண்ணிற்கு போலீசார் பிரசவம் பார்க்க சம்பவம் வேலூரில் நெகிழியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *