
உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆதனூர் கிராமத்தில் 09 டிசம்பர் 22 ல் குரங்கு மின் கம்பி மீது தாவி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத நிலையில் திடீரென்று மின்கம்பி உரசல் ஏற்பட்டு தீப்பொறி கூரை விட்டு மேல் விழுந்து தீ பற்றி 2 வீடு பற்றி எறிந்தது. இதனால் கூரை வீட்டிலிருந்த சிலிண்டர் பெரும் சத்தத்துடன் வெடித்ததனால் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டு 5 லட்சத்துக்கும் மதிப்பிற்கும் மேற்ப்பட்ட பொருள்கள் தீ கரியாக ஆகின இதனை தொடர்ந்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீ அணைப்பு துறையினர் தீ அனைத்து பதிக்கப்பட்ட சேதங்களை ஆய்வு செய்தனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதிக்கப்பட்ட 1. ஈஸ்வரி க/பெ கொளஞ்சி 2.ராஜாங்கம் த/பெ சன்னியாசி 3.பாலமுருகன் த/பெ சின்னதம்பி ஆகியோரின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி மற்றும் உடனடியாக புதிய வீடு கட்டுவதற்கு ஆணையம் வழங்கிட வேண்டும் மற்றும் 75 ஆண்டுகால சுந்தர இந்தியாவில் இன்னும் குடிசைகள் ஒழிக்கப்படவில்லை இது மன வருத்தம் அளிக்கிறது என்றும் தீ விபத்துக்கு காரணமான குரங்குகளை வனத்துறை அதிகாரிகள் பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகப்படியான கிராமத்தில் குடிசைகள் அதிகமாக உள்ளதால் இதனை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அரசு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடு வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் ந.ஜீவன்ராஜ் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.