
ஆந்திரா: நெல்லூர் மாவட்டம் விஞ்சமூரில் ஜில்லா பரிஷத் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது, அதே பகுதியை சேர்ந்த சேக் சஜிதா என்ற மாணவி ஏழாம் வகுப்பு படித்து வந்தார், அப்போது ஆசிரியர் மாணவியிடம் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மாணவிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது நெஞ்சை பிடித்துக்கொண்டு மாணவி மயங்கி சுருண்டு கீழே விழுந்தார், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள், மாணவியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி சேக் சஜிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். பின்னர் இந்த செய்தி அப்பகுதி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, மருத்துவ மனைக்கு வந்த பெற்றோர் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர், அது அங்கிருந்த பலருக்கும் கண்ணீரை வரவழைக்கும் விதமாக இருந்தது, பின்னர் இதுகுறித்து ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர், அதில் பள்ளியின் உயிரியல் ஆசிரியர், மாணவியிடம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருந்தேன், மாணவியும் அதற்கு நல்ல முறையில் பதில் அளித்துக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென ஒரு பக்கமாக சாய்ந்தார், கை கால்களை உதைத்துக் கொண்டார், வலிப்பு நோய் ஏற்பட்டு விட்டதே என கையில் பேனாவை திணித்தேன், ஆனால் மாணவியின் உடல் திடீரென அடக்கி விட்டது, ஐந்து நிமிடத்திற்குள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றோம், ஆனால் அங்கு மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினார் என வேதனையுடன் தெரிவித்தார்.