ஆங்கிலேயர்களுக்கு பயந்து, மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவர் சாவர்க்கர்: ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி.!

மகாராஷ்டிரா: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்திய ஒற்றுமை பயணத்தை தமிழ்நாட்டில் தொடங்கி நடைபயணம் கேரளா மாநிலம் வழியாக சென்று கர்நாடாக, தற்போது மகாராஷ்டிராவில் நடைபெறுகிறது. மோடி அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளை தனது நடைபயத்தின் போது அம்பலப்படுத்தி வருகிறார். மேலும் மோடி அரசின் மோசமான கொள்கையை விமர்சிக்கும் அதேவேளையில், பா.ஜ.கவின் முக்கிய தலைவராக கொண்டாடப்படும் சுதந்திர போராட்ட வீரராக கருதப்படும் சாவர்க்கரை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக சுதந்திரப்போராட்டக் காலத்தில் ஆங்கிலயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்ததை ராகுல்காந்தி விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று நவம்பர் 16ல் ராகுல்காந்தி மகாராஷ்டிராவில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி சுதந்திரப் போராட்டக்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததை உண்மையை உலகிற்கு கொண்டு வரும் விதமாக, மன்னிப்பு கடிதத்தின் நகலை வெளியிட்டார். மேலும் அந்த கடித்தில், “உங்கள் கீழ்படிந்துள்ள பணியாளர் நான் என்பதை மன்றாடி சொல்லிக் கொள்கிறேன்” என சாவர்க்கர் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, “இந்த கடித்தை எழுதியற்கு பின்னல் உள்ள காரணம் என்ன? அச்சம் காரணமாக ஆங்கிலயருக்கு அஞ்சி மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளார். அவரைத்தான் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவராக கருதுகிறது.ஆனால், ஆங்கிலேயர்கள் பிர்சா முண்டாவுக்கு நிலம் வழங்கிய போதிலும், தலைவணங்க மறுத்தார். அதனால் மரணத்தைத் தேர்ந்தெடுத்தவர் பிர்சா முண்டா. காங்கிரஸ், அவரை தலைவராக கருதுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *