
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் பெண்ணை செல்லிடைப்பேசியில் தனிமைக்கு அழைத்த காவலருக்கு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தர்ம அடி கொடுத்தனர்.அவிநாசி அருகே வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இந்நிலையில் இவரது மகள் தனது காதலருடன் சாலையோரம் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த காவலர் சுப்பிரமணி(38) சாலையோரம் நின்றிருந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு, அவரது செல்லிடைப்பேசி எண்ணையும் பெற்றுச் சென்றுள்ளார்.பிறகு பெண்ணின் செல்லிடைப்பேசிக்கு அழைத்த காவலர் சுப்பிரமணி, அவரை தனியாக வருமாறு கூறியள்ளார். இதையறிந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள், காவலர் கூறிய இடத்திற்கு வரவழைத்து, அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.இதைத்தொடர்ந்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவலர் சுப்பிரமணி திருப்பூர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.